அன்னை திருமணிமுத்தாறு
புனிதம் காப்போம்
நதிகளை வணங்குவோம்
அன்னை திருமணிமுத்தாறு
அகிலலோக நாயகியாம் அன்னை ஸ்ரீ பார்வதி ஒருசமயம் ஸ்ரீ பரமேஷ்வரனிடம், ஐயனே! மக்களில் சிலர் வேதம் உபநிஷதங்கள் முதலான அறநூல்களைப் படித்து நம் அருள் பெறுகின்றனர். கல்வியறிவு பெறாதவர்களும், வேதம் முதலான சாஸ்திரங்களைப் படிக்க வாய்ப்பில்லாதவர்களும் நமது அருளைப் பெற அருள்புரிய வேண்டும் என பிரார்த்தித்தார்.
ஸ்ரீ சிவபெருமானும் “ஓம் நமசிவாய” என்னும் தமது பஞ்சாக்ஷர மந்திரத்தையே நதியாகப் பிரவாஹமெடுத்து ஓடச்செய்தார். அதற்கு பாரத தேசத்தின் பற்பல புண்ணிய நதிகளின் அந்தஸ்தையும் வழங்கினார். யார் ஒருவர் இந்த நதியில் நீராடினாலோ, ஒரு துளி அருந்தினாலோ அவர்கள் உடல்பிணி. உள்ளப்பிணி அகலும்; பாவம் தொலையும்; மேலும் எனது பரிபூரண அருளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள் என அருளினார். ஸ்ரீ ஸர்வேஷ்வரனின் பஞ்சாக்ஷர மந்திரமே நதியாகப் பாய்வதால் ஸ்ரீ பஞ்சாக்ஷர நதி என்னும் திருநாமம் பெற்றது. இந்த நதியில் முன்னொரு காலத்தில் முத்துக்கள் கிடைத்ததால் திருமணிமுத்தாறு என்றும் சிறப்பிக்கப்படுகிறது. பாவம் போக்கும்…
ஸ்ரீ சுகவனேஷ்வரஸ்வாமி திருக்கோயில் தலவரலாறான சேலம் புராணம் என்னும் பாபநாச தலபுராணமானது வசிஷ்ர், மனு சக்ரவர்த்தி, காளத்தி போன்ற எண்ணற்றோர் இப்பஞ்சாக்ஷர நதியில் நீராடி ஸ்ரீ சுகவனேஷ்வரரை வணங்கித் தங்களது பாவங்களைப் போக்கிக் கொண்டதாகக் கூறுகிறது. சிறப்புக்களின் சிகரம்…
அறுநூற்றுமலை ஆறு. ஜருகுமலை ஆறு. போதமலை ஆறு நகரமலை ஆறு, கஞ்சமலை ஆறு. சொன்னை ஆறு முதலான ஆறுகளைக் கிளை நதிகளாகக் கொண்ட திருமணிமுத்தாறு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 13 ஊர்களில் சிறிதும் பெரிதுமான 290 ஏரிகளை நிரப்பி 16,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற பொருதார முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. பொருளாகார மலர்ச்சியில் மணிமுத்தாறு…
Upcoming Events
அன்னை திருமணிமுத்தாறு புனிதம் காப்போம்
நீரின்றி அமையாது உலகு!
நதிகளை வணங்குவோம்
சேலம் திருமணிமுத்தாறு மஹாஆரத்தி திருவிழா அழைப்பிதழ்
அகில பாரதீய சந்தியாசிகள் சங்கம் நிறுவனர்
தவத்திரு ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மஹராஜ்
19-2-2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 8.00 மணி: சேர்வராயன் மலை ஏற்காடு நகர் பகுதியில் திருமணிமுத்தாறு பாய்ந்தோடி வரும் வசம்பாடி நீர்விழ்ச்சி அருகில்
மாலை: 6.00 மணி: மஹா ஆரத்தி திருவிழா சேலம் டஷன் சுகவனபுரி வாசனி மஹால் அருகில், திருமணிமுத்தாற்றின் தென்கரையில்யம்புவாக அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷர கணபதி திருக்கோயில் அருகில் மஹா ஆரத்தி திருவிழா
நதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தைப் பாதுகாக்க நீங்கள் உதவலாம். இன்றே நன்னீர் படையில் சேரவும்.
தன்னார்வ வாய்ப்புகள் குறைவாக இருந்தால், மீன்பிடித்தலை ஆராயுங்கள், ஒரு கயாக் வாடகைக்கு விடுங்கள் அல்லது உள்ளூர் நீர்வழிப்பாதையில் உலா செல்லுங்கள். நம்மை ஆதரிக்கும் நதிகளை இணைக்க செலவிடும் எந்த நேரமும் நன்றாகவே செலவிடப்படுகிறது.
ஆறுகளுக்கும் உணவுக்கும் உள்ள ஆழமான தொடர்பைப் புரிந்து கொள்ளுங்கள்
நமது உணவு முறைக்கு நதிகளின் பங்களிப்பு முன்னெப்போதையும் விட இப்போது தெளிவாக இருக்கும் அதே வேளையில், கிரகத்திற்கு உணவளிப்பதில் நமது மிகப்பெரிய கருவிகளில் ஒன்றை சேதப்படுத்தும் அபாயத்தில் இருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளில், நமது நன்னீர் இனங்களின் மக்கள்தொகையில் 84% ஐ இழந்துவிட்டோம், மேலும் நன்னீர் நீரில் 50% பல்லுயிர் இழப்புக்கு உணவு முறைகளே காரணம். நாங்கள் அதிக தண்ணீரை வெளியேற்றுகிறோம், அதிக மீன்களைப் பிடிக்கிறோம், நீர்மின்சாரத்திற்காக சுதந்திரமாக ஓடும் ஆறுகளை அணைக்கிறோம், மேலும் மாசுபடுத்தும் நதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறோம். நமது கிரகத்தின் எல்லைக்குள் 2050க்குள் 10 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க வேண்டுமானால், நமது மிகப்பெரிய வளங்களில் ஒன்றாக நதிகளை நாம் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும்.